UPDATED : ஆக 26, 2020 12:00 AM
ADDED : ஆக 26, 2020 03:38 PM
புதுடில்லி:
செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் இணையத்தில் இருந்து பதிவறக்கம் செய்துகொள்ளலாம்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ம் தேதி, நாடு முழுவதும் மொத்தம் 3,843 மையங்களில் நடைபெறவுள்ளது. அதேபோல், ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் செப்.,1 முதல் 6ம் தேதி வரையிலும், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு செப்.,27ம் தேதியும் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால், கொரோனா பரவலுக்கு இடையே நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான மனுவையும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே ஜே.இ.இ., தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று (ஆக.,26) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
