UPDATED : ஆக 27, 2020 12:00 AM
ADDED : ஆக 27, 2020 09:07 AM
சென்னை;
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு, நாளை கடைசி நாள்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி மற்றும் ஒன்பது தனியார் கல்லுாரிகள் உள்ளன.அரசு கல்லுாரியில், ஆறு இடங்கள்; தனியார் கல்லுாரிகளில், 600க்கும் மேற்பட்ட இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. பிளஸ் 2ல், அறிவியல் பாடங்களை படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய, நாளை கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள, அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை தபால், கூரியர் வாயிலாக, வரும், 31ம் தேதிக்குள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
