தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அமைச்சருக்கு கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அமைச்சருக்கு கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அமைச்சருக்கு கடிதம்


UPDATED : ஆக 27, 2020 12:00 AM

ADDED : ஆக 27, 2020 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2020 12:00 AM ADDED : ஆக 27, 2020 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்து, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச வர்தனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கொரோனா பரவல் காரணமாக, நடப்பாண்டில் நீட் தேர்வை கைவிட வேண்டும். தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,ம் மாநில அரசின் வழிமுறைபடி மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும், நீட் தேர்வை கைவிட வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் போராடி வருகின்றன. இச்சூழலில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பாதிப்புகள் ஏற்படவே வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதும் சவாலானது.
இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எப்படி மதிப்பார்கள்: ஸ்டாலின்

விஜயபாஸ்கரின் கடிதம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: 
தமிழக அரசு நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையெனில், 7 மாநில அரசுகளைப் போல, தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என கூறியிருந்தேன். விஜயபாஸ்கர் கடிதம் எழுதி உள்ளாராம். சட்டசபை தீர்மானத்தை மதிக்காதவர்கள், இவரது கடிதத்தை மதிப்பார்களா? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us