தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகுதியற்ற 105 உதவி பேராசிரியர்கள் குறித்து ஒய்வு நீதிபதி அறிக்கை

தகுதியற்ற 105 உதவி பேராசிரியர்கள் குறித்து ஒய்வு நீதிபதி அறிக்கை

தகுதியற்ற 105 உதவி பேராசிரியர்கள் குறித்து ஒய்வு நீதிபதி அறிக்கை


UPDATED : ஆக 28, 2020 12:00 AM

ADDED : ஆக 28, 2020 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2020 12:00 AM ADDED : ஆக 28, 2020 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் நியமிக்கப்பட்ட, 105 உதவி பேராசிரியர்களுக்கு தகுதியில்லை என்பதால், நியமனங்களை ரத்து செய்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ், கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளன; கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. அறக்கட்டளை தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அறக்கட்டளைக்கு தேர்தல் நடத்தவும், அறக்கட்டளை தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகத்தையும் நியமித்து, நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி அமர்வில், நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், அறக்கட்டளை தலைவரான நீதிபதி சண்முகம் தாக்கல் செய்த அறிக்கை:

அறக்கட்டளையின் கீழ் இயங்கும், ஆறு கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டிருந்த, 105 உதவி பேராசிரியர்களுக்கு, குறைந்தபட்ச தகுதி இல்லை என்பதால், அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. சிலர் விளக்கம் அளிக்க, அவகாசம் கேட்டுள்ளனர்.
சிலருக்கு, நியமன உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்ததால், நியமன ரத்து உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த புதிய திட்டம், பச்சையப்பன் அறக்கட்டளை வரலாற்றில், ஒரு மைல் கல். என் மீது நம்பிக்கை வைத்து, இடைக்கால நிர்வாகியாக நியமித்த நீதிபதி சதீஷ்குமார், தலைவராக நியமித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமாருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அறக்கட்டளை தலைவர் பதவியில் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும். புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us