தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/432 ஆசிரியர் பணியிடங்கள் காலி எப்படி முன்னேறும் விழுப்புரம்

432 ஆசிரியர் பணியிடங்கள் காலி எப்படி முன்னேறும் விழுப்புரம்

432 ஆசிரியர் பணியிடங்கள் காலி எப்படி முன்னேறும் விழுப்புரம்


UPDATED : அக் 26, 2009 12:00 AM

ADDED : அக் 26, 2009 02:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2009 12:00 AM ADDED : அக் 26, 2009 02:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலைமை இப்படி இருக்க, தேர்ச்சி சதவிகிதம் எப்படி அதிகரிக்கும் என்பது கல்வித்துறைக்கே வெளிச்சம். விழுப்புரம் மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது.  அதற்கேற்ப மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு பின்னோக்கி செல்வதால், உயர்கல்வித் துறை அமைச்சருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க சி.இ.ஓ., முதல் ஆசிரியர்கள் வரை பலர்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மாவட்டத்திலுள்ள 243 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அனைத்து பாடங்களையும் எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியர்களுக்கும் இதர பாடங்கள் குறித்து முழுமையாக  கற்றுத் தர இயலாது. இதனால், மாணவர்கள் போதிய அளவில் பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியானால், உடனே ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமோ குறைவு. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளத்துடன் பல சலுகைகளை அரசு வழங்குகிறது. இருப்பினும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி விழுக்காட்டில் முன்னிலை பெறுவதிலேயே அதிகம் நாட்டம் காட்டி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் ஆண்டு தோறும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மாவட்டத்தில் மட்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 108 பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர்கள் 324 பணியிடங்களும் என, மொத்தம் 432 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
காலிப் பணியிடங்களால் பாட ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். அப்பாடங்களில் மாணவர்கள் போதிய கவனம் செலுத்த இயலாமையும், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.


உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் சொந்த மாவட்டத்தில் 432 பணியிடங்கள் காலியாக இருப்பது வேதனையான விஷயம். எனவே, அமைச்சர் துரித நடவடிக்கை எடுத்து காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us