தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு கட்டாயம்! உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு கட்டாயம்! உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு கட்டாயம்! உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்


UPDATED : ஆக 29, 2020 12:00 AM

ADDED : ஆக 29, 2020 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2020 12:00 AM ADDED : ஆக 29, 2020 09:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரி தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
செமஸ்டர் தேர்வு:

டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், கல்லுாரி மற்றும் பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, அந்த மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, &'யு.ஜி.சி., பல்கலைகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை, செப்., 30க்குள் கட்டாயம் நடத்த வேண்டும்&' என, அறிவித்தது. இதை எதிர்த்து, மாணவர்கள் மற்றும் சிவசேனா கட்சி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்களில், &'கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில், தேர்வை நடத்துவது, மாணவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்&' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, யு.ஜி.சி., கூறியதாவது: பல்கலை விவகாரம் தொடர்பான சட்ட நடைமுறைகளுக்கு எதிராக, மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது. யு.ஜி.சி.,க்கு மட்டுமே, தேர்வு தொடர்பான முடிவுகளை எடுக்கும் சட்ட ரீதியான அதிகாரம் உள்ளது.
கல்வித் தரம்:

இந்த விஷயத்தில், மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட்டால், அங்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது. எனவே, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை, செப்., 30க்குள் நடத்த வேண்டும். இறுதியாண்டு தேர்வை நடத்தினால் மட்டுமே, மாணவர்களின் கல்வித் தரம் அதிகரிக்கும். இவ்வாறு, யு.ஜி.சி., தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்களுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது அவசியம் என்ற, யு.ஜி.சி.,யின் வாதத்தை, இந்த நீதிமன்றம் ஏற்கிறது.
இறுதியாண்டு தேர்வை நடத்தாமல், மாணவர்களின் முந்தைய தேர்வு செயல்பாடுகள், பயிற்சி வகுப்புகள் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, அவர்கள் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவிக்க, மாநில அரசுகள், பல்கலைகளுக்கு அதிகாரம் இல்லை.
கொரோனா வைரஸ்:

செப்., 30க்குள், இறுதியாண்டு தேர்வை நடத்த வேண்டும் என, யு.ஜி.சி., ஏற்கனவே அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, இந்த குறிப்பிட்ட தேதிக்குள் தேர்வை நடத்த முடியாத மாநில அரசுகள், தேர்வை ஒத்தி வைத்து, மீண்டும் எப்போது நடத்துவது என்பதற்கான விளக்கங்களை பெற, யு.ஜி.சி.,யை அணுகலாம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us