தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வருக்கு கோவிலே கட்டலாம்: கொண்டாடும் அரியர்ஸ் மாணவர்கள்

முதல்வருக்கு கோவிலே கட்டலாம்: கொண்டாடும் அரியர்ஸ் மாணவர்கள்

முதல்வருக்கு கோவிலே கட்டலாம்: கொண்டாடும் அரியர்ஸ் மாணவர்கள்


UPDATED : ஆக 29, 2020 12:00 AM

ADDED : ஆக 29, 2020 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2020 12:00 AM ADDED : ஆக 29, 2020 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என, பலரது வாழ்வை புரட்டி போட்டிருந்தாலும், மாணவர்களுக்கு பெரும்பாலும் நல்லதையே செய்துஉள்ளது. தினசரி வகுப்பு, புத்தக சுமை, தேர்வு, டியூஷன் என, எதுவும் இல்லாமல், வீட்டிலேயே சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரிகள் எப்போது திறக்கப்படும் என, அரசு இன்னும் அறிவிக்காத நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கு, &'ஜாக்பாட்&' அடித்ததை போல, அமைந்தது, முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு.இறுதியாண்டு, &'செமஸ்டர்&' தேர்வு தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வு கள், அரியர் தேர்வு கள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பதே அது.கல்லுாரி காலம் முடிந்தும், அரியர்ஸ் தேர்வுக்காக, நடையாய் நடந்த பல மாணவர்களுக்கு, இது இன்ப அதிர்ச்சியாக அமைந்துவிட்டது.
இதனால், தங்கள், &'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், டிபி&' ஆகியவற்றில், முதல்வரின் படத்தை வைத்து கொண்டாடும் அளவிற்கு, அரியர் மாணவர்கள், இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். 
மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ள மாணவர்கள் கருத்துக்கள் இதோ:

முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன். தொடர்ந்து கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தால், தேர்வு எழுதுவது சுலபமாக இருந்திருக்கும். நீண்ட இடைவெளியில் தேர்வு என்பது, கடினமான ஒன்றே. ஆல்பாஸ் என்ற முதல்வரின் அறிவிப்பு உண்மையிலேயே பெருமகிழ்ச்சி. இந்த அறிவிப்புக்கு, அவருக்கு கோவிலே கட்டலாம். - ஆர்.எஸ்.ஆகாஷ்ராஜ்,; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர், கொளத்துார். 
திருவொற்றியூர், அரசு உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் இளங்கலை படித்தேன். 2017ல், படிப்பு முடிந்த நிலையிலும், ஆறு பாடங்களில், தேர்ச்சி பெற முடியவில்லை. தொடர்ச்சியாக, அந்த பாடங்களில் தேர்ச்சி பெற விண்ணப்பித்து முயற்சித்து வந்தேன். இந்நிலையில், முதல்வர், அரியர் பாடங்களிலும் தேர்ச்சி அறிவித்துள்ளார். மூன்று ஆண்டு கால தவத்திற்கு முடிவு கிடைத்துவிட்டது. இதன் மூலம், பட்டப்படிப்பு நிறைவுற்றிருப்பது, அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. - என்.விக்னேஷ், 24, திருவொற்றியூர்.
மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்படி நடக்கும் என, நினைத்துக் கூட பார்க்கவில்லை. அரியர் இருந்ததால், பயத்தோட இருந்தோம். முதல்வர் இ.பி.எஸ்., கடவுள் போல் வந்து, என்னை போன்ற மாணவர்களை தேர்ச்சி பெற செய்து விட்டார். - இ.பாலாஜி, 24;பி.ஏ., தமிழ்துறை இறுதியாண்டு, லயோலா கல்லுாரி.
நான் தேர்ச்சி பெற்றதை நினைத்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கஷ்டமான சூழ்நிலையில், நான் கேட்ட மகிழ்ச்சியான செய்தி இது. முதல்வருக்கு நன்றி. - எஸ்.மானசா சாவித்ரி, 17; பி.காம்., இரண்டாம் ஆண்டு, ஆவடி.
நாங்கள் தேர்வுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா காரணமாக, மாணவர்கள் நலனுக்காக முதல்வர் இப்படி எடுத்த முடிவுக்கு நன்றி. - வி.மீனா, பி.எஸ்இ., கணிதம் கொளத்துார்.
பொதுவாக பல அரியர்கள் வைத்துள்ள மாணவர்கள், சந்தோஷமாக சுற்றும்போது, ஒரே ஒரு அரியரை வைத்த என் போன்றோர், நிம்மதி இல்லாமல் சுற்றுவர். அதுவும் இந்த கொரோனா காலத்தில், நிம்மதியே இல்லை. இந்நிலையில், முதல்வரின் அறிவிப்பு, நிம்மதியோடு சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறுதி, &'செமஸ்டர்&' தேர்வு குறித்தும், முதல்வர் நல்ல அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்போது தான், விரைவாக நல்ல வேலையில் சேர முடியும். -ஆர்.பரத்குமார், 21பி.எஸ்.சி., கணினி அறிவியல். பட்டாபிராம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us