தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கான்கிரீட்டிற்கு மாற்றாக பிளாஸ்டோன் பிளாக்; பேராசிரியருக்கு மத்திய அரசு காப்புரிமை

கான்கிரீட்டிற்கு மாற்றாக பிளாஸ்டோன் பிளாக்; பேராசிரியருக்கு மத்திய அரசு காப்புரிமை

கான்கிரீட்டிற்கு மாற்றாக பிளாஸ்டோன் பிளாக்; பேராசிரியருக்கு மத்திய அரசு காப்புரிமை


UPDATED : ஆக 30, 2020 12:00 AM

ADDED : ஆக 30, 2020 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2020 12:00 AM ADDED : ஆக 30, 2020 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை;
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி டீன் வாசுதேவன், சிமென்ட், &'கான்கிரீட்&'டிற்கு மாற்றாக கண்டுபிடித்த, &'பிளாஸ்டோன் பிளாக்&'கிற்கு, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.
கல்லுாரி முதல்வர் ஷாலினி கூறியதாவது:

இக்கல்லுாரி பேராசிரியர்களின் ஐந்து கண்டுபிடிப்புகள், அமெரிக்க காப்புரிமையும்; மூன்று, இந்திய காப்புரிமையும் பெற்றுள்ளன; 27 கண்டுபிடிப்புகள் பரிசீலனையில் உள்ளன. தற்போது, டீன் வாசுதேவன் கண்டுபிடிப்பிற்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசுதேவன் கூறியதாவது: 

பிளாஸ்டிக் கழிவுகள், ஜல்லி, கட்டுமான குப்பை, கிரானைட் கழிவுகள், பீங்கான் கழிவுகள், சுண்ணாம்பு கல்லுடன் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத, சுற்றுச்சூழலுக்கு தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேர்த்து, பிளாஸ்டோன் பிளாக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிமென்ட் கான்கிரீட்டைக் காட்டிலும், 10 மடங்கு வலிமை கொண்டது.நடைபாதைகள், வீடுகளுக்குள் தடுப்புச் சுவர்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைகள், கட்டட தரை, அலமாரி சிலாப்புகள், டைனிங் டேபிள்களுக்கு பயன்படுத்தலாம். செலவும் குறைவு; நீடித்து உழைக்கக்கூடியது. தேய்மானம் இல்லை; உடையாது.கடந்த, 2006ல் இதற்கான கண்டுபிடிப்பு துவங்கியது.
இந்த ஆண்டு, ஆக., 20ல் மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.இதை கண்டுபிடிக்க, கல்லுாரி தாளாளர் கருமுத்து கண்ணன் ஊக்கம் அளித்தார். உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், ராமலிங்கம் சந்திரசேகரன், சுந்தர கண்ணன் உதவியாக இருந்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
பிளாஸ்டிக் சாலை கண்டுபிடித்ததற்காக, வாசுதேவனுக்கு, 2006ல் மத்திய அரசு காப்புரிமையும், 2018ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us