தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு

கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு

கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு


UPDATED : ஆக 30, 2020 12:00 AM

ADDED : ஆக 30, 2020 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2020 12:00 AM ADDED : ஆக 30, 2020 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டது. 29 ம் தேதி கலெக்டர்களுடனும், மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில், தற்போதுள்ள ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் 30.9.2020 வரை நீட்டிக்கப்படுகிறது. 
* சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கொள்ளப்படுகிறார்கள்
* உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டுபயிற்சிகளுக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது எனினும், விளையாட்டுமைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
* திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல் திறக்கலாம்
* வங்கிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவுனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான தடை தொடரும். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை ஊக்குவிக்கலாம்
* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கான தடை தொடரும்.
* சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us