UPDATED : ஆக 31, 2020 12:00 AM
ADDED : ஆக 31, 2020 08:17 AM
புதுச்சேரி:
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி புதுச்சேரி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கொறடா அனந்தராமன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா பேரிடரால், நாட்டு மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சூழலில் மத்திய அரசு, &'நீட்&' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை அறிவித்திருப்பது மிக அதிர்ச்சியையும் மற்றும் , வேதனையையும் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்க செயல் மாணவர்கள் எவ்வித பயிற்சி வகுப்புக்கும் செல்லாத நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள &'நீட்&' மற்றும் ஜெ.இ.இ., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டி புதுச்சேரி அரசு சார்பில் அரசு கொறடா என்ற முறையில் நான் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளேன்.
மாணவ சமுதாயத்தின் நலன் கருதி, முதல்வர் நாராயணசாமியின் ஆலோசனையின் பேரில் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நிச்சயமாக உச்சநீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பு வழங்கி இந்த தேர்வை ரத்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
