தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்


UPDATED : செப் 01, 2020 12:00 AM

ADDED : செப் 01, 2020 06:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2020 12:00 AM ADDED : செப் 01, 2020 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
மருத்துவக்கல்லூரி வழங்கிய, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, அ.தி.மு.க., பாசறைக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பூத் வாரியாக, பாசறை நிர்வாகிகள் நியமித்தல் குறித்த ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரியில் நடந்தது. அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். பாசறை மாவட்ட செயலாளர் முரளிபிரசாத் வரவேற்றார். மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், இணை செயலாளர் ஆனந்த் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். 
கூட்டத்தில், 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை, அ.தி.மு.க.,வில் சேர்த்து, கட்சி பணியாற்றுவது; கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, அரசு மருத்துவக்கல்லூரியை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், நகர செயலாளர் கேசவன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் தங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us