தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலீசார் வாரிசுகளுக்கு கல்லுாரி சீட்

போலீசார் வாரிசுகளுக்கு கல்லுாரி சீட்

போலீசார் வாரிசுகளுக்கு கல்லுாரி சீட்


UPDATED : செப் 03, 2020 12:00 AM

ADDED : செப் 03, 2020 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2020 12:00 AM ADDED : செப் 03, 2020 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை போலீசாரின் வாரிசுகளுக்கு, அவர்கள் விரும்பிய கல்லுாரிகளில், பிடித்தமான பாடப்பிரிவுகளில், &'சீட்&' வாங்கி கொடுத்து, சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.
சென்னையில், கொரோனா பரவல் தடுப்பு பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், 2,349 பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பி உள்ளனர். இவர்களை போல, கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரின் வாரிசுகள், பிளஸ் 2 முடித்து இருந்தால், அவர்கள் விரும்பிய கல்லுாரியில், பிடித்தமான பாடப்பிரிவுகளில், &'சீட்&' பெற்றுத் தரப்படும் என, போலீஸ் கமிஷனர் சுற்றிக்கை வெளியிட்டார்.
அதன் பின், போலீசாரின் வாரிசுகள், தேர்வு செய்துள்ள கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த தகல்கள் சேகரிக்கப்பட்டன. பின், அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், இடம் ஒதுக்கி தருமாறு, கல்லுாரி நிர்வாகத்தினருக்கு, போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதினார்.அந்த வகையில், முதற்கட்டமாக, 52 மாணவ - மாணவியருக்கு, விரும்பிய கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளில் சேர இடம் கிடைத்தது. ஆக., 20ல், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ - மாணவியருக்கு, கல்லுாரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
இரண்டாம் கட்டமாக, 71 மாணவ - மாணவியருக்கு, நேற்று நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை கமிஷனர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், போலீசாரின் வாரிசுகளுக்கு, தங்கள் கல்லுாரிகளில் இடம் ஒதுக்கீடு செய்த, முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us