கல்லூரிகளில் 30,000 சீட்கள் காலி கோடிக்கணக்கில் பெரும் இழப்பு
கல்லூரிகளில் 30,000 சீட்கள் காலி கோடிக்கணக்கில் பெரும் இழப்பு
UPDATED : அக் 26, 2009 12:00 AM
ADDED : அக் 26, 2009 01:56 PM
இதனால், தனியார் கல்லூரிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்தியப்பிரேதச கல்லூரிகளில், நுழைவுத் தேர்வில் மதிப்பெண் எடுக்காவிட்டாலும் , நுழைவுத் தேர்வே எழுதாவிட்டாலும் மாணவர்கள் சேரலாம் என்று அறிவித்த பின்னரும் கூட பி.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., போன்ற தொழிற் படிப்புகளுக்கான இடங்கள் காலியாக கிடக்கின்றன.
பி.இ., படிப்பில் 20 ஆயிரம், எம்.பி.ஏ., படிப்பில் இரண்டாயிரம், எம்.சி.ஏ., படிப்பில் மூவாயிரம், பி.பார்ம்., எனப்படும் மருத்துவப் படிப்பில் நாலாயிரம், டி.பார்மில் ஆயிரம் என்று மொத்தம் 30 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
இனி தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு 503 கோடி ரூபாய் அளவுக்குத் தனியார் கல்லூரிகளில் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பி.இ.,ல் உள்ள 20 ஆயிரம் காலியிடங்களால் 360 கோடி ரூபாய்; எம்.சி.ஏ., காலியிடங்களால் 45 கோடி ரூபாய்; எம்.பி.ஏ., காலியிடங்களால் 18 கோடி ரூபாய்; பி மற்றும் டி பார்ம்களின் காலியிடங்களால் தலா 80 கோடி ரூபாய் மற்றும் 77 லட்ச ரூபாய் என்று கோடிக்கணக்கில் நஷ்டத்தை இந்த வெற்றிடங்கள் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் மதிப்பிட்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ம.பி.,யில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல தனியார் பொறியியல் கல்லூரிகளில், அட்மிஷன் மிகவும் குறைந்துவிட்டதால் அவற்றை இழுத்து மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மந்தம் மற்றும் மாநில அரசு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ.,) இவற்றின் தவறான கல்விக் கொள்கைகளே இந்தப் பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
