நுாலகங்களில் குடும்ப உறுப்பினர் அட்டை திட்டம் அறிமுகம்
நுாலகங்களில் குடும்ப உறுப்பினர் அட்டை திட்டம் அறிமுகம்
UPDATED : செப் 04, 2020 12:00 AM
ADDED : செப் 04, 2020 07:32 AM
ராமநாதபுரம்:
பொதுமக்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, ஒரே குடும்பத்தில் உள்ள 5 உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திலும் சிறுவர், பெரியோர் வரை அனைவரிடமும் நுாலகங்களை பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கவும், புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்க குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது ஒரு உறுப்பினர் ஒரு நுால் பெறமுடியும். இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தை சார்ந்த ஒருவர் ரூ.100 செலுத்தி உறுப்பினராகி, ஒரே சமயத்தில் 5 நுால்களை பெறலாம். இது தொடர்பாக அனைத்து நுாலகங்களிலும் குடும்ப நுாலக உறுப்பினர் அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் சேர்க்கப்படும் உறுப்பினர் விபரங்களை மாதந்தோறும் மாவட்ட நுாலக அலுவலகத்திற்கு கிளை நுாலகத்தினர் அனுப்பிவைக்க வேண்டும் என நுாலகத்துறை அதிகாரிகள் கூறினர்.
