தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வைரஸை கட்டுப்படுத்தும் காற்று சீரமைப்பான்; மாணவர்கள் சாதனை

வைரஸை கட்டுப்படுத்தும் காற்று சீரமைப்பான்; மாணவர்கள் சாதனை

வைரஸை கட்டுப்படுத்தும் காற்று சீரமைப்பான்; மாணவர்கள் சாதனை


UPDATED : செப் 04, 2020 12:00 AM

ADDED : செப் 04, 2020 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2020 12:00 AM ADDED : செப் 04, 2020 08:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி அழகப்பா பல்கலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதத்தில், &'ஏ.சி.,&'யில் உபயோகப்படுத்தக்கூடிய புறஊதாக்கதிர்களை கொண்ட காற்று சீரமைப்பானை உருவாக்கியுள்ளனர்.
புற ஊதா கதிர்வீச்சு மூலம் டி.என்.ஏ., கட்டமைப்புகள் உடைக்கப்பட்டு பாக்டீரியா, வைரஸ் மற்றும் கொரோனா நோய் தொற்றுகள் போன்ற ஒற்றை செல் கிருமிகளை அழிக்க முடியும். இக்காற்று சீரமைப்பானில் உள்ள எல்.இ.டி.,விளக்கில் இருந்து வெளிவரும் குறுகிய அலைநீளம் (250 என்.எம்.,) கொண்ட புற ஊதா கதிர்கள் 99.99 சதவீதம் பாக்டீசியா மற்றும் கொரோனா வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவை.
வழக்கமான தொழில்நுட்பம் போன்று புறஊதா சி எல்.இ.டி.,க்களில் பாதரசம் பயன்படுத்தப் படுவது இல்லை. இப்புதிய காற்று சீரமைப்பானில் புற ஊதா சி நன்றாக பாதுகாக்கப் படுவதால், இது மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்காதது. 
மேலும் இதை பொதுவான இடத்தில் பயன்படுத்தப்படும் &'ஏ.சி.,&'க்களிலும் பொருத்தலாம் என பல்கலை அறிவியல் கருவி மைய மாணவர்கள் மாணவர்கள் பிரதீஷ், அங்கப்பன், பரணிபடிக்காசு, அழகிரி ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இம்மாணவர்களை துணை வேந்தர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us