தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கல்வி கொள்கையால் மனப்பாடம் மறையும்

புதிய கல்வி கொள்கையால் மனப்பாடம் மறையும்

புதிய கல்வி கொள்கையால் மனப்பாடம் மறையும்


UPDATED : செப் 06, 2020 12:00 AM

ADDED : செப் 06, 2020 07:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2020 12:00 AM ADDED : செப் 06, 2020 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இருமடங்காக உயரும்

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
தலைநகர் மும்பையில் உள்ள பார்லே திலக் வித்யாலயா அசோசியேஷன் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கை, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும். 21ம் நுாற்றாண்டில், இளைஞர்கள் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வர்.புதிய கல்விக் கொள்கை - 2020, ஒரு புரட்சிகர சீர்த்திருத்தம். இதன் மூலம். கற்பித்தல், கற்றல் அனுபவங்கள், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். புதியக் கல்விக் கொள்கை, அடிப்படை கல்வி மற்றும் எண் கல்வியறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது, அமல்படுத்தப்பட்டபின், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம், அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்காக உயரும். 
சவாலான குடிமக்கள்

நம்முடைய காலங்களில், பாடங்களை மனப்பாடம் செய்வது வழக்கம். அதன்பின், நமக்கு தெரிந்தவற்றை, தேர்வறையில் வாந்தி எடுப்போம். ஆனால், புதிய கல்வி கொள்கையில், மனப்பாடம் செய்வதற்கான தேவையே இல்லை. அதற்குப் பதிலாக, பகுப்பாய்வு செய்தல் போன்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மூன்று முதல், எட்டு வயதுடைய குழந்தைகளுக்கு அறிவுத்திறன் வளர்ச்சி முக்கியம். 
இளம் பருவத்திலேயே, செயல் அடிப்படையிலான கற்றல், புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சம். இது, ஒன்பதாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, மாணவர்களிடையே விஞ்ஞானபூர்வ ஆர்வத்தை வளர்க்கும். உலக அளவில், சவாலான குடிமக்களை உருவாக்க வேண்டுமெனில், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், நம் கல்வியில் முக்கியத்துவம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us