புதிய கல்வி கொள்கையால் தரம் உயரும்: யு.ஜி.சி., உறுப்பினர்
புதிய கல்வி கொள்கையால் தரம் உயரும்: யு.ஜி.சி., உறுப்பினர்
UPDATED : செப் 07, 2020 12:00 AM
ADDED : செப் 07, 2020 08:40 PM
கோவை:
புதிய கல்வி கொள்கை, மாணவர்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கும்; தரமாக கல்வி கற்க துணையாக இருக்கும் என, வெபினார் நிகழ்வில் பல்கலை மானியக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் கூட்டமைப்பு சார்பில், &'புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வி&' என்ற தலைப்பில் &'வெபினார்&' நிகழ்வு நடந்தது.
பல்கலை மானியக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசுகையில், &'&'புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் கல்லுாரிகளின் தரத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். கல்லுாரிகளில் பல தரப்பட்ட பாடங்களை தரத்துக்கு ஏற்ப வழங்க வழிவகை செய்யும்.
இந்த புதிய கல்வி கொள்கை, மாணவர்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கும். அவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்து, தரமாக கல்வி கற்க துணையாக இருக்கும். இடைவெளிவிட்டு கல்வியை தொடர முடியும் என்பன போன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன,&'&' என்றார்.
இந்த வெபினார் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்பட்டது. சுயநிதிகலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி கூட்டமைப்பு நிர்வாகிகள், பல்வேறு கல்லுாரிகளைசேர்ந்த நிர்வாகிகள், முதல்வர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
