தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் எதிர்காலத்தை பலியாக்காதீர்

மாணவர்கள் எதிர்காலத்தை பலியாக்காதீர்

மாணவர்கள் எதிர்காலத்தை பலியாக்காதீர்


UPDATED : செப் 10, 2020 12:00 AM

ADDED : செப் 10, 2020 07:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2020 12:00 AM ADDED : செப் 10, 2020 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'சுயவிளம்பர மோகத்தால், மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்காதீர்&' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேர்வு இல்லாமல், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்பது உயர்படிப்புகளிலும், தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளிலும், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அண்ணா பல்கலை துணை வேந்தருக்கு, நேற்று முன்தினம் எழுதிய, கடிதம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், அந்த குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்புரத்தோ, அரியர் தேர்வு ரத்து என்பது தவறான முடிவு எனத் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை நடத்தத் தயார் என, அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமத்திடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும், அரைவேக்காட்டுத் தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்காதீர். மாணவர்களின் நியாயமான, தகுதியான வேலை வாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு, வழிவகை காண்பீர். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us