தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரியலுார் மாணவருக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு

அரியலுார் மாணவருக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு

அரியலுார் மாணவருக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு


UPDATED : செப் 11, 2020 12:00 AM

ADDED : செப் 11, 2020 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2020 12:00 AM ADDED : செப் 11, 2020 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்:
அரியலுார் மாவட்டம் இலந்தங்குழியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 19, 2017ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்ற இவர் தனியார் நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றார்.
இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் செப்.13ல் நீட் தேர்வை எழுத தயாராகி வந்தார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் பா.ம.க.வினர் மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின் விக்னேஷின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். பா.ம.க. சார்பில் 10 லட்சம், வி.சி.க. சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
ரூ.7 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி

இறந்த மாணவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும் , என அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us