தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் ஸ்டாலினுக்கு வழிகாட்டுகிறார் எச்.ராஜா

நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் ஸ்டாலினுக்கு வழிகாட்டுகிறார் எச்.ராஜா

நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் ஸ்டாலினுக்கு வழிகாட்டுகிறார் எச்.ராஜா


UPDATED : செப் 13, 2020 12:00 AM

ADDED : செப் 13, 2020 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2020 12:00 AM ADDED : செப் 13, 2020 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்:
&'&'நீட் தேர்வு வழக்கு நளினி சிதம்பரத்தின் வாதத்தால் தான் முடிந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டியது சிதம்பரம் வீட்டு வாசலில் தான்,&'&' என பா.ஜ., தேசிய செயலர் ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது.எச்.ராஜா பேசியதாவது: 

நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்திய காரணத்தால் சில மாணவர்கள் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பிளஸ் 2 வில் மார்க் குறைவு என்றும் மார்க் குறைவாக வரும் என்றும் பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூற முடியுமா. காதல் தோல்வியால் பலரும் தற்கொலை செய்கின்றனர். அதற்காக காதலிப்பது தவறு என்று சட்டம் இயற்றினார்களா.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்களே. கனிமொழியின் மகன் ஹிந்தி பேசுகிறாரே அதை தடுப்பார்களா, தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பிரச்னை செய்து வருகின்றன, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us