UPDATED : செப் 15, 2020 12:00 AM
ADDED : செப் 15, 2020 08:44 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதால், தற்போதுள்ள இட ஒதுக்கீடு விதிகளில், எவ்வித திருத்தமும் செய்யப்படாது என, மத்திய கல்வி அமைச்சர், ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.
நாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வருவதால், தற்போதுள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகளில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என, நேற்று தொடங்கிய லோக்சபா குளிர்கால கூட்டத்தொடரில், எழுத்து மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த, மத்திய கல்வி அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், &'&'புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வருவதால், இட ஒதுக்கீடு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளும், எவ்வித திட்டமும் இல்லை,&'&' என்றார்.
