UPDATED : அக் 27, 2009 12:00 AM
ADDED : அக் 27, 2009 02:40 PM
இந்த பல்கலைக் கழகங்களை உருவாக்குவதற்கு, அமெரிக்க
பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயலாற்றலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அமெரிக்காவிற்கு ஒரு வார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், பிரபலமான ஹார்வர்டு, யேல், ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
மேலும், இந்திய கல்வி மையங்களுடன் இணைந்து செயலாற்றுவது குறித்தும் அவர்களுடன் விவாதித்தார்.
இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், 14 புதிய பல்கலைக் கழகங்கள் அமைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு பல்கலைக் கழகங்களை உருவாக்குவதில், அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றுடன் இணைந்து செயலாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்கா, ஆண்டுக்கு 75 ஆயிரம் இன்ஜினியர்களை உருவாக்குகிறது. ஆனால், இந்தியாவில் பெங்களூரு நகரம் மட்டுமே, ஆண் டுக்கு 65 ஆயிரம் இன்ஜினியர்களை உருவாக்குகிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
