UPDATED : செப் 15, 2020 12:00 AM
ADDED : செப் 15, 2020 08:54 AM
அ நிறம் | அளவு
சென்னை:
&'&'மாணவ சமுதாயம், தி.மு.க.,வை மன்னிக்காது,&'&' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
மாணவர்கள் நலனை குழிதோண்டி புதைத்தது, தி.மு.க., - - காங்கிரஸ் கூட்டணி. அவர்கள் ஆட்சியில் இருந்த போது, &'நீட்&' தேர்வை கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. அதை மறைத்து விட்டு, பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல, ஒன்றும் அறியாதது போன்று, வானத்தில் இருந்து குதித்து வந்தது போல, தி.மு.க., பேசுவது வேடிக்கையாக உள்ளது. மாணவ சமுதாயம், தி.மு.க.,வை மன்னிக்காது. தமிழகத்தை பொறுத்தவரை, நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எங்கள் கொள்கை.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
