நம் கோவை சுற்றுச்சூழல் குறுந்தகடு பாரதியார் பல்கலையில் வெளியீடு
நம் கோவை சுற்றுச்சூழல் குறுந்தகடு பாரதியார் பல்கலையில் வெளியீடு
UPDATED : அக் 27, 2009 12:00 AM
ADDED : அக் 27, 2009 03:42 PM
கோவையின் மாறி வரும் சுற்றுச்சூழலை விளக்கும் நம் கோவை எனும் குறுந்தகடு வெளியீட்டு விழா, பாரதியார் பல்கலையில் நடந்தது. கோவை மேற்கு மண்டல சிறைத் துறைத் தலைவர் கோவிந்தராஜன் குறுந்தகட்டை வெளியிட, மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார். சமூகப் பணியியல் துறைத் தலைவர் சேதுராம சுப்பையா விழாவுக்கு தலைமை தாங்கினார்.
பல்கலையின் சமூகப் பணியியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாமோதரன், முத்துராஜா, திலகவதி, பிரியங்கா, சத்யபிரியா ஆகியோர் தயாரித்துள்ள இந்த குறுந்தகட்டில், கோவையின் சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்த ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர் யோகநாதன், தோழர் அறக்கட்டளை நிர்வாகி சாந்தகுமார் ஆகியோர் குறுந்தகடு தயாரித்த மாணவர்களை பாராட்டினர்.
