தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்


UPDATED : செப் 19, 2020 12:00 AM

ADDED : செப் 19, 2020 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2020 12:00 AM ADDED : செப் 19, 2020 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி மாவட்டம், அரூரில், தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து நடந்த கையெழுத்து இயக்கத்துக்கு, மாவட்ட வித்யா பாரதி அமைப்பின் செயலாளர் செம்முனி தலைமை வகித்தார். 
அகில பாரத சன்னியாசிகள் சங்க துணைத் தலைவர் ரமானந்த மகராஜ், பொதுச் செயலர் ஆத்மானந்த மகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையில், எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழி கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தாய் மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியாவில் உள்ள பிற மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட ஏதேனும் ஒரு மொழியை மூன்றாவது மொழியாக கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மதிய உணவு மற்றும் காலையில் சிற்றுண்டி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
பெண் குழந்தைகள், பாதுகாப்பான முறையில் கல்வி கற்க, விடுதி வசதியுடன் கூடிய பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை, பொதுமக்களிடம் வித்யா பாரதி அமைப்பினர் வழங்கினர். அரூர் கம்பன் கழகத் தலைவர் செவ்வேள் முருகன், மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார், திருக்குறள் தமிழ்ச் சங்கத் தலைவர் பொன்னுரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us