தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கரும்புச் சாறு விற்கும் பள்ளி தமிழாசிரியர்

கரும்புச் சாறு விற்கும் பள்ளி தமிழாசிரியர்

கரும்புச் சாறு விற்கும் பள்ளி தமிழாசிரியர்


UPDATED : செப் 20, 2020 12:00 AM

ADDED : செப் 20, 2020 09:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2020 12:00 AM ADDED : செப் 20, 2020 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி தமிழாசிரியர் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார்.
சிவகங்கை வி.புதுக்குளத்தை சேர்ந்தவர் டி.சுரேஷ் 36, இவர் 2008ல் எம்.ஏ., தமிழ், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் படித்து முடித்தார். 2009ல் பி.எட்., பயின்றார். நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக 9 ஆண்டு பணிபுரிந்தார். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிகிறார்.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஊருக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் உள்ளார். பள்ளியில் 25 சதவீதம் மட்டுமே சம்பளமாக தருகின்றனர். குடும்பத்தை காப்பாற்ற தந்தை செய்து வந்த தொழிலான கரும்புசாறு தயாரித்து சிவகங்கையில் விற்பனை செய்கிறார்.
சுரேஷ் தெரிவித்ததாவது: கொரோனாவால் பள்ளி மூடப்பட்டது. குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த கஷ்டமாக இருந்ததால், தனது தந்தையின் கரும்புசாறு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறேன். மாணவர்களுக்கு இடைவேளை நேரத்தில் ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறேன். பள்ளி திறந்த பின் கரும்புசாறு கடையை எனது தந்தையிடம் விட்டு செல்வேன், என்றார். 
இவரை பாராட்ட 89404 68583.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us