UPDATED : செப் 20, 2020 12:00 AM
ADDED : செப் 20, 2020 09:29 AM
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறலாம்.
அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை பெற, பெற்றோரின் ஆண்டு வருவாய், இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் விண்ணப்பம் பெற்று, நவ.,30க்குள், கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை இணையதளத்தில், புதுப்பித்தலுக்கு நவ.,15 கடைசி நாள்; புதிதாக விண்ணப்பிக்க ஜன.,31க்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அரசு இணைய தளம், www.tn.gov.in/bcmbcdeptt மூலம் படிவத்தை பெற்று, கூடுதல் விபரம் அறியலாம்.
