தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்

மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்

மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்


UPDATED : செப் 20, 2020 12:00 AM

ADDED : செப் 20, 2020 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2020 12:00 AM ADDED : செப் 20, 2020 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
புதிய கல்வி கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என, மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட, புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழி கொள்கைக்கு, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில், இரு மொழிக் கொள்கை தொடரும்&' என, தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக, லோக்சபா மழைக்கால கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இருமொழிக்கொள்கையை அமல்படுத்தக்கோரி, தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்ததா&'... என, எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சகம், புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும். மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்த மொழியும் திணிக்கப்படாது. மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம்,&' என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us