தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ.,1 முதல் கல்லூரிகள் திறப்பு

நவ.,1 முதல் கல்லூரிகள் திறப்பு

நவ.,1 முதல் கல்லூரிகள் திறப்பு


UPDATED : செப் 23, 2020 12:00 AM

ADDED : செப் 23, 2020 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2020 12:00 AM ADDED : செப் 23, 2020 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா பரவல் காரணமாக, மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே, நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதன் பின், பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, பள்ளி, கல்லுாரிகளை திறக்க முடியவில்லை. பின், செப்டம்பர் மாதத்தில், கல்லுாரிகளை திறக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் குறையாததால், அதை செயல்படுத்த முடியவில்லை. இதையடுத்து, இந்த கல்வியாண்டில், குறைந்த நாட்களை ஈடுகட்டும் வகையில், கல்லுாரிகளை நடத்துவது பற்றி பரிந்துரைகளை தெரிவிக்க, வல்லுனர் குழு ஒன்றை யு.ஜி.சி., அமைத்தது.
இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, &'ஆன்லைனில்&' நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை பணிகளை, அக்டோபர், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். நவ., 1ம் தேதி முதல், முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட வேண்டும்.கொரோனா பரவலால், இழந்த நாட்களை ஈடு செய்யும் வகையில், வாரம், ஆறு நாட்கள் கல்லுாரிகள் நடத்தப்பட வேண்டும்.
குளிர்கால மற்றும் கோடைக்கால விடுமுறை நாட்களை ரத்து செய்ய வேண்டும். முதல் செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச், 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கலாம். மார்ச், 8ம் தேதி முதல், 26ம் தேதி வரை, முதல் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும். மார்ச், 27ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரை, முதல் செமஸ்டர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
ஏப்ரல், 5ம் தேதி முதல், இரண்டாம் செமஸ்டருக்கான வகுப்புகள் துவக்கப்பட வேண்டும். தேர்வுக்கு தயாராக ஆக., 1 முதல், 8ம் தேதி வரை விடுமுறை அளித்து, ஆக., 9 முதல், 21 வரை தேர்வை நடத்தலாம். ஆக., 22 முதல், 29 வரை விடுமுறை அளிக்கலாம். ஆக., 30ல் மீண்டும் கல்லுாரியை திறக்கலாம். இவ்வாறு வல்லுனர் குழு கூறியிருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற யு.ஜி.சி., அதை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. 
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், &'டுவிட்டரில்&' நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருந்தாவது:


முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகளை திறப்பது பற்றி, யு.ஜி.சி., அளித்த பரிந்துரையை, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நவ., 1ம் தேதி முதல், கல்லுாரிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி, யு.ஜி.சி., தெரிவித்துள்ள விதிமுறை பின்பற்ற, பல்கலைகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் குறையாத நிலையில், ஆந்திரா, அசாம் உட்பட பல மாநிலங்களில், 9 - 12ம் வகுப்பு வரை, கடந்த, 21ம் தேதி முதல், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் சில திறக்கப்பட்டுஉள்ளன. மேலும் பல மாநிலங்களில், காலாண்டு தேர்வு முடிந்து, அக்., 5ம் தேதி முதல், 9 - 12 வகுப்பு வரை, பள்ளிகளை முழுமையாக திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், கல்லுாரிகளை, நவ., 1ம் தேதி முதல் திறக்க, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லுாரிகளை திறக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us