தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி துறையில் 35 பேருக்கு இடமாற்றம்

கல்வி துறையில் 35 பேருக்கு இடமாற்றம்

கல்வி துறையில் 35 பேருக்கு இடமாற்றம்


UPDATED : செப் 23, 2020 12:00 AM

ADDED : செப் 23, 2020 09:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2020 12:00 AM ADDED : செப் 23, 2020 09:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்லுாரி கல்வி துறையில், எட்டு இணை இயக்குனர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் உட்பட, 35 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

உயர்கல்வி துறை செயலர், அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணை விபரம்:

* கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அந்தஸ்தில், எட்டு பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், திட்டமிடல் பிரிவுக்கு ராமலஷ்மி; நிதி பிரிவுக்கு தீபா ஆகியோர் இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்*கோவைக்கு கலைச்செல்வி; திருச்சிக்கு மேகலா; மதுரைக்கு பொன் முத்துராமலிங்கம்; திருநெல்வேலிக்கு லதா பூரணம் ஆகியோர் மண்டல இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்
* கல்லுாரி கல்வி இயக்குன ராக முன்னர் கூடுதல் பொறுப்பு வகித்த, இணை இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் தர்மபுரி மண்டலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்
* ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக, விழுப்புரம் அரசு கல்லுாரி முதல்வர் ரமா நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதிய முதல்வர்கள்

*விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரிக்கு, சிவகுமார்; திண்டுக்கல் பெண்கள் அரசு கல்லுாரிக்கு அனுராதா; ராமநாதபுரம் ராஜா சேதுபதி அரசு கல்லுாரிக்கு பால் கிரேஸ்; திருப்பூர் சிக்கன்னா அரசு கல்லுாரிக்கு கிருஷ்ணன் மற்றும் பெண்கள் கல்லுாரிக்கு, எழில் ஆகியோர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
சென்னை கல்லுாரிகள்

* சென்னை மாநில கல்லுாரி முதல்வராக கிருஷ்ணன்; ராணி மேரி கல்லுாரிக்கு உமா மகேஸ்வரி; வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லுாரிக்கு சுமதி; திருத்தணி அரசு கல்லுாரிக்கு விஜயலஷ்மி ஆகியோர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us