தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய சித்த மருத்துவ மையம்: தமிழகத்தில் அமைக்க பிரதமருக்கு கடிதம்

தேசிய சித்த மருத்துவ மையம்: தமிழகத்தில் அமைக்க பிரதமருக்கு கடிதம்

தேசிய சித்த மருத்துவ மையம்: தமிழகத்தில் அமைக்க பிரதமருக்கு கடிதம்


UPDATED : செப் 25, 2020 12:00 AM

ADDED : செப் 25, 2020 08:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2020 12:00 AM ADDED : செப் 25, 2020 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, பிரதமருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

உங்கள் தலைமையிலான மத்திய அரசு, இந்திய மருத்துவ முறைகளான, சித்தா, ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.மத்திய அரசு, தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்க உள்ளதை அறிந்தேன்.
அதை நடப்பு நிதியாண்டு, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். சித்த மருத்துவ முறை உருவான தமிழகத்தில், தேசிய சித்த மருத்துவ மையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும். மையம் அமைக்க, நல்ல காற்று, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதியுடன், தேவையான நிலம், சென்னை அருகிலேயே, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசு கேட்கும் விபரங்களை அனுப்பி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும்; சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us