UPDATED : செப் 26, 2020 12:00 AM
ADDED : செப் 26, 2020 09:40 AM
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக் கான, ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித்துறை சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இதில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான ஆன்லைன் பதிவு, ஏற்கனவே முடிந்து விட்டது. பதிவு செய்துள்ள, 1.60 லட்சம் பேருக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அசல் சான்றிதழ்களின் பிரதிகள், ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு, சரிபார்க்கப் பட்டு உள்ளன. பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன. சில சந்தேகங்கள் உள்ள சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள்; சில சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் மட்டும், சேவை மையத்துக்கு வரவழைக்கப்பட்டு, விளக்கம் கேட்கப்படுகிறது.
இந்நிலையில், கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளின் படி, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தரவரிசை பட்டியலை, வரும், 28ம் தேதி வெளியிட, கவுன்சிலிங் குழு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
