தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு


UPDATED : அக் 01, 2020 12:00 AM

ADDED : அக் 01, 2020 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2020 12:00 AM ADDED : அக் 01, 2020 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

&'ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள், அக்., 4ம் தேதி நடத்தப்படும்&' என, யு.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.&'கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால், இந்த ஆண்டுக்கான தேர்வை, மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்&' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:


சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது. ஏற்கனவே திட்டமிட்டபடி, அக்., 4ம் தேதி தேர்வுகள் நடைபெறும். கடந்த சில மாதங்களில், பல்வேறு பொதுத் தேர்வுகள் வெற்றிகரமாக, எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளன. அதுபோல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், இந்த தேர்வையும் நடத்தலாம்.
அடுத்த ஆண்டு தேர்வுடன், இந்தாண்டு தேர்வையும் சேர்ப்பது என்பது, பல பிரச்னைகளை ஏற்படுத்தும். போக்குவரத்து வசதி இல்லை என்பது போன்ற காரணங்களுக்கு உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்தி வைக்க முடியாது. இந்த தேர்வை எழுதுவதற்கு, இந்த ஆண்டு தான் கடைசி வாய்ப்பு என்று உள்ளவர்கள், ஒருவேளை தேர்வை எழுத முடியாவிட்டால், அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்க, யு.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us