தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி கருத்துக் கேட்புக் கூட்டம் கண் துடைப்பு

சமச்சீர் கல்வி கருத்துக் கேட்புக் கூட்டம் கண் துடைப்பு

சமச்சீர் கல்வி கருத்துக் கேட்புக் கூட்டம் கண் துடைப்பு


UPDATED : அக் 28, 2009 12:00 AM

ADDED : அக் 28, 2009 04:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2009 12:00 AM ADDED : அக் 28, 2009 04:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள் ஆவேசம் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை முடிவு செய்து விட்டு, அரசு பெயரளவில் கருத்துக் கூட்டம் நடத்துகிறது. இது, வேலைக்கு ஆள் தேர்வு செய்து விட்டு தேர்வு வைப்பது போன்றது என நேற்று நடந்த சமச்சீர் கல்வி கருத்தரங்கில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வி பற்றி கோவையில் நடந்த கருத்தரங்கில் ஆசிரியர்களைத் தவிர பிற சமூக ஆர்வலர்களை விரிவாக பேச, மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் அனுமதிக்க மறுத்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாடத்திட்டத்தை ஏற்கனவே முடிவு செய்து விட்டு, கண் துடைப்புக்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் ஆவேசமுடன் தெரிவித்தனர்.


கோவையில் நடந்த சமச்சீர் கல்வி கருத்தரங்கில், கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று கருத்து தெரிவிக்க ஆசிரியர்கள் பலர் வந்திருந்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் கிருஷ்ணராஜ் பேசுகையில், சமச்சீர் கல்வித் திட்டம் வந்தால் வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற்றிக் கொள்வர்.
 
வசதியற்றவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றிக் கொள்வார்கள். இதனால் தனியார் பள்ளிகளும் அதில் பணிபுரியும் ஆசிரியர்களும்தான் பாதிக்கப்படுவர், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு கிராக்கி ஏற்படும், என்றார்.
ம.தி.மு.க., பொறியாளர் பிரிவின் மாநில துணை அமைப்பாளர் ஈஸ்வரன் என்பவர் பேசுகையில், ஒரே பாடத்திட்டத்தை அனைவருக்கும் வைத்து விட்டால் சமச்சீர் கல்வி வந்து விடாது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் திறன், எண்ணிக்கையையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் அரசு செலவிடுகிறது.


தமிழக அரசுப்பள்ளி மாணவனுக்கு 1,100 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதை உயர்த்த வேண்டும். கல்விக்கென மத்திய பட்ஜெட்டில் நான்கு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதை எட்டு சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றார். கருத்தரங்கில் விரிவாக பேச ஆசிரியர்களைத் தவிர பிறரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு கருத்து தெரிவிக்க வந்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது பற்றி அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது. கண் துடைப்புக்காக இது போன்ற கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது வேலைக்கு ஆளை தேர்வு செய்து விட்டு தேர்வு வைப்பதைப் போன்றது. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய விஷயத்தில் இது போல் அவசரம் அவசரமாக செயல்படுவது சரியல்ல, என்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி இது பற்றி கூறுகையில், பாடவாரியாக தேர்வு செய்யப்பட்ட கல்வியாளர்களின் கருத்துக்களை அறிய மட்டுமே மாநிலம் முழுவதும் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அனைவரையும் பேச அனுமதிப்பது சாத்தியமில்லை. கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள், பள்ளிக்கல்வி இணையதளத்தில் வரைவு பாடத்திட்டத்தை படித்து அதன் மூலமாகவே கருத்துக்களை தெரிவிக்கலாம், என முடித்துக் கொண்டார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us