தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு

மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு

மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு


UPDATED : அக் 04, 2020 12:00 AM

ADDED : அக் 04, 2020 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2020 12:00 AM ADDED : அக் 04, 2020 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மாணவர்கள் உயிர் விவகாரத்தில் அக்கறை இல்லாமல் பள்ளியை முன்கூட்டியே புதுச்சேரி அரசு திறக்கின்றது என தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் விடுத்துள்ள அறிக்கை: 

தமிழகத்தை விட கொரோனா தொற்று புதுச்சேரியில் வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில் நாளை 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு 15ம் தேதி மேல் பள்ளிகளை திறக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. 
அப்படி இருக்கும்போது முன்கூட்டியே பள்ளிகளை திறக்க புதுச்சேரி அவசரம் காட்டுவது ஏன். மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மாநில அரசு துளி அக்கறையும் இல்லாமல் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதையே இதுகாட்டுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us