தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்பியலுக்கான நோபல் பரிசு; விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு; விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு; விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு


UPDATED : அக் 07, 2020 12:00 AM

ADDED : அக் 07, 2020 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2020 12:00 AM ADDED : அக் 07, 2020 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டிற்கு, துறை வாரியாக நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருந்துளை உருவாக்கம் குறித்த, பொதுவான சார்பியல் கோட்பாட்டை உருவாக்கியதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென்ரோசுக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக, ஜெர்மனியை சேர்ந்த ரெயின்ஹார்டு கென்செல், அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ்- ஆகியோருக்கும், நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, இந்த மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதில், ரோஜர் பென்ரோசுக்கு, பரிசுத் தொகையில், 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு, தலா, 25 சதவீதமும் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us