தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் திறப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு


UPDATED : அக் 07, 2020 12:00 AM

ADDED : அக் 07, 2020 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2020 12:00 AM ADDED : அக் 07, 2020 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
வரும், 15 முதல் திறக்கப்படும் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை, மத்திய கல்வித் துறை அமைச்சகம், நேற்று வெளியிட்டது.
மத்திய அரசு, சமீபத்தில் அறிவித்த ஐந்தாம் கட்ட தளர்வில், வரும், 15ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. கிருமி நாசினிஎனினும், இதில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய கல்வித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும், 15 முதல் திறக்கப் படும் பள்ளிகளில் உள்ள மேஜைகள், கருவிகள், தண்ணீர் தொட்டிகள், &'கேன்டீன்&' கழிப்பறை, ஆய்வகங்கள், நுாலகம் என, அனைத்து பகுதிகளும், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சமூக இடைவெளிமுக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினி உபயோகிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளிகள் திறந்து, மூன்று வாரங்கள் வரை தேர்வுகள் நடத்தப்படக்கூடாது.
மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களை வீட்டிலேயே இருக்க ஊக்குவிக்கும் வகையில், வருகைப்பதிவு மற்றும் விடுப்புக் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும். பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே, மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். &'ஆன்லைன்&' வகுப்புகள் வேண்டுமென்றால், மாணவர்கள் அதை தேர்வு செய்துகொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us