தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளை திறக்க வேண்டாம்: கர்நாடக மாஜி முதல்வர்கள் வற்புறுத்தல்

பள்ளிகளை திறக்க வேண்டாம்: கர்நாடக மாஜி முதல்வர்கள் வற்புறுத்தல்

பள்ளிகளை திறக்க வேண்டாம்: கர்நாடக மாஜி முதல்வர்கள் வற்புறுத்தல்


UPDATED : அக் 11, 2020 12:00 AM

ADDED : அக் 11, 2020 10:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2020 12:00 AM ADDED : அக் 11, 2020 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று மாஜி முதல்வர்கள் மாநில அரசை வற்புறுத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் கொரோனா பரவல் குறையாத சூழலில் மாநிலத்தி்ல் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்று மாஜி முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் அரசை வற்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், ‛ தற்போதைய சூழலில் மாநிலத்தின் ஆரம்ப, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டாம். பெற்றோர்கள் அனைவரும் பள்ளிகள் திறப்பிற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலரின் சுயலாபத்திற்காக மாநில அரசு அடிபணியக் கூடாது. பள்ளிகளை திறந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மாணவர்களின் உயிரில் விளையாடக் கூடாது.
தற்போது பெறப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநிலத்தில் 10 வயதுக்கும் கீழ் உள்ள 20,256 மாணவர்களும், 11 வயது முதல் 20 வயது நிரம்பிய 47,061 மாணவர்களும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 61 மாணவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மாநிலத்தில் உள்ள பள்ளிகளை வரும் அக்.,15ம் தேதி திறக்க கல்வித் துறை முடிவு செய்யலாம் என்று அறிக்கை. வெளியிட்பட்டுள்ளது. இருப்பினும் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை கர்நாடகாவில் மொத்தம் 6.8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இருப்பினும் 5.52 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மொத்தம் 9,675 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us