UPDATED : அக் 13, 2020 12:00 AM
ADDED : அக் 13, 2020 08:43 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தணிக்கை துறைக்கு, இளநிலை உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட, 1௦ பேருக்கு, பணி நியமன ஆணையை, துணை முதல்வர் பன்னீர்செல்வம்நேற்று வழங்கினார்.
தமிழக நிதித் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவுதணிக்கை துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில்,இளநிலை உதவியாளர்கள், ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைக்கு, ஐந்து இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, பணி நியமன ஆணையை, நேற்று தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நிதித் துறை செயலர் கிருஷ்ணன், கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனர் மணிவாசகன், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இயக்குனர் வேல்சாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
