தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கற்றதை சமூகத்திற்கு கொடுக்கிறேன்

கற்றதை சமூகத்திற்கு கொடுக்கிறேன்

கற்றதை சமூகத்திற்கு கொடுக்கிறேன்


UPDATED : அக் 13, 2020 12:00 AM

ADDED : அக் 13, 2020 08:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2020 12:00 AM ADDED : அக் 13, 2020 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய படி, தன் சுற்றுப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் வேண்டிய உதவிகளை, நண்பர்கள் குழுவுடன் இணைந்து செய்து வரும் ஆறுமுகம்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், பழவேற்காடு தான் சொந்த ஊர். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.
குடிக்கு அடிமையான அப்பா, அதனாலேயே இறந்து விட்டார்; அம்மா, விவசாய கூலி. மதிய உணவுக்காகவே, பள்ளிக்கு போன, முதல் தலைமுறை பட்டதாரி நான். பள்ளியில் படிக்கும் போது, எனக்கு தேவையான எல்லா உதவிகளையும், ஆசிரியர்கள் தான் செய்வர். வீட்டில் விளக்கு கிடையாது. படிக்கவும், துாங்கவும், இங்குள்ள பள்ளி நுாலகத்தை தான் எனக்கு தந்தனர்; அதில் தான், தங்கிஇருந்து படித்தேன். எனக்கு உதவி செய்த ஆசிரியர்களிடம் இருந்து தான், படிப்புடன், சமூகத்தையும் கற்றுக் கொண்டேன். நான் கற்றதை, இந்த சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கத் தான், என்னால் ஆன சமூக சேவைகளில் ஈடுபடுகிறேன்.
நானும், நண்பர்களும் சேர்ந்து, இந்த பகுதியில் உள்ள, 20 கிராமங்களில், இலவசமாக டியூஷன் எடுக்கிறோம். 850 மாணவர்கள் பயனடைகின்றனர். 27 ஆசிரியர்கள், பகுதி நேரமாக, தன்னார்வலர்களாக பல கிராமங்களுக்கு சென்று, மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். இந்த பகுதி மாணவர்களுக்கு குளிப்பது முதல், நோய் தடுப்பு வரை பலவற்றிற்கு, விழிப்புணர்வு ஊட்டி வருகிறோம். மரம் நடுவது, பெண்களுக்கு தொழிற்கல்வி கற்றுக் கொடுப்பது; ஊருக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தருவது என, எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.
மேலும், அரசு வழங்கும் சலுகைகள், அப்பாவி மக்களுக்கு சென்றடைவதற்கான உதவிகளை செய்கிறோம். இப்படி, 100 கிராமங்களில், எங்களின் தன்னார்வலர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதில் உள்ளவர்கள், அந்த பகுதி மேம்பாட்டிற்காக பாடுபடுகின்றனர். ஊருக்கோ அல்லது தனி நபருக்கோ ஏதேனும் பிரச்னை என்றால், முதல் நபர்களாக, எங்கள் இளைஞர்கள் நிற்கின்றனர். அவரவருக்கு பிடித்தமான, முடிந்த வேலையை செய்யச் சொல்லி, பிரித்து அனுப்புகிறேன். 
எங்களுடன் உள்ள இளைஞர்கள், தவறான பாதைக்கு செல்லாமல், சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவுகின்றனர். அவர்களின் பெற்றோரால், &'இவன் உருப்படவே மாட்டான்&' என கூறப்பட்ட பலர், சமூகத்திற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றனர்.எங்களைப் பற்றி அறிவோர், எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருகின்றனர். அவர்கள் மூலம், சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us