தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை


UPDATED : அக் 16, 2020 12:00 AM

ADDED : அக் 16, 2020 05:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2020 12:00 AM ADDED : அக் 16, 2020 05:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள முக்கிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு, சீர்மிகு சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்காக, கூடுதல் நிதி உதவி செய்யும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேர, தமிழக உயர்கல்வி துறையும், அண்ணா பல்கலையும் இணைந்து விண்ணப்பித்தன. இதற்கு, மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. ஆனால், பல்வேறு அரசியல் காரணமாகவும், நிதி பற்றாக்குறை காரணமாகவும், மத்திய அரசின் அந்தஸ்தை பெறுவதில், தமிழக உயர்கல்வி துறை தயக்கம் காட்டி வருகிறது. உயர் அந்தஸ்து பெற்றால், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது.
தர்மபுரியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது; 

பிளஸ் 2 தேர்வில் தனித்தேர்வர்களும் தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பாக, இடம் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வரும்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்வி குறியாகும். இட ஒதுக்கீட்டை பறி கொடுக்க முடியாது. சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வரக்கூடும், கூடுதல் கட்டணம் வர வாய்ப்புள்ளது. இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. ஐ.ஓ.இ மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள் தமிழக அரசே வழங்கும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கையில் 2035 ஆம் ஆண்டு உயர்கல்வி பயின்றவர்கள் சதவீதம் 50 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சென்ற ஆண்டே 49 சதவீதம் எட்டி உள்ளது இந்த ஆண்டு கணக்கீட்டின்படி 50 சதவீதத்தை எட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பு


இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் கூறியதாவது: 

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாக சுதந்திரமாக செயல்பட முயற்சி. இதற்கு சிலர் தடை போடுகின்றனர். சிறப்பு அந்தஸ்து மூலம், எந்த நேரத்திலும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது. இது பாதிக்கப்படும் எனக்கூறப்படுவது பொய் எனக்கூறியுள்ளார்.
ஆதரவு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
 
தமிழக அரசின் முடிவு காலதாமதமானாலும், வரவேற்கத்தக்கது. இதை மத்திய அரசுக்கு கடிதம் மூலமாகவும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அண்ணா பல்கலை துணைவேந்தராக உள்ள சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய, கவர்னரிடம் வேந்தராக உள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us