UPDATED : அக் 17, 2020 12:00 AM
ADDED : அக் 17, 2020 10:08 PM
சென்னை:
&'&'அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்பது, அரசியல் உள்நோக்கம் உடைய கருத்து,&'&' என, முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து, புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று வெளியிட்டார். அதன்பின், பாலகுருசாமி அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை, உலகிலேயே மிகவும் பழமையான, இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில் ஒன்று. ஐ.ஐ.டி.,யை விட, ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது.
அதனால் தான், அதை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தும் வகையில், ஐ.ஓ.இ., என்ற சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது. இந்த அந்தஸ்து கிடைத்தால், அண்ணா பல்கலையின் கல்வி, ஆராய்ச்சி தரம் இன்னும் உயரும். அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவர்கள் தரம் உயரும். அரசியல் உள்நோக்கத்துடன், அண்ணா பல்கலையின் அந்தஸ்தை, கட்சிகள் எதிர்க்கின்றனவா என, தெரியவில்லை.
இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளும் விஷயம் தெரியாமல், போராட்டம் நடத்துகின்றன. சர்வதேச அளவிலான சிறப்பு அந்தஸ்து, அண்ணா பல்கலைக்கு கிடைக்க வேண்டும் என, மாநில அரசுக்கு, அவர்கள் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.சிறப்பு அந்தஸ்தால் இட ஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என, மத்திய மனிதவள அமைச்சகத்தில் இருந்து தமிழகத்துக்கு, ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கின்றனர். அதன்பின்னரும், இந்த விஷயத்தில் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு, அவர் கூறினார்.
