தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்து சாலை மறியல் செய்த பெற்றோர் கைது

மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்து சாலை மறியல் செய்த பெற்றோர் கைது

மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்து சாலை மறியல் செய்த பெற்றோர் கைது


UPDATED : அக் 31, 2009 12:00 AM

ADDED : அக் 31, 2009 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2009 12:00 AM ADDED : அக் 31, 2009 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலைமகள் மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கலைமகள் பள்ளியின் ஒரு வளாகத்தில், அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி, மெட்ரிக் பள்ளி ஆகியவையும், அருகிலுள்ள மற்றொரு வளாகத்தில், நர்சரி மற்றும் துவக்கப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
 
பள்ளி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி, மாணவியர் சேர்க்கையின் போது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக நன்கொடை வசூலித்தது உட்பட பல புகார்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டன. "மெட்ரிக்&' பள்ளி அமைக்க, அரசு நிர்ணயித்த இடவசதியின்மை காரணமாக, மெட்ரிக் பள்ளிக்கான அங்கீகாரத்தை கல்வித்துறை ரத்து செய்தது. இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளது.
 
கலைமகள் பள்ளி தாளாளரும், செயலருமான மங்களவதி, நடப்பு கல்வியாண்டுக்கான செயலர் பதவியை, ஏப்ரல் 31ம் தேதி வரை புதுப்பிக்காததால், அவரை அப்பதவியில் இருந்து விடுவித்து, முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முன், பெற்றோர் சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். பின், பெற்றோர் அனைவரையும், 30ம் தேதி காலை பள்ளி வளாகத் துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். என்னவென்றே விவரம் புரியாத சில பெற்றோர், பள்ளிக்கு வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எனக் பேசிய சிலர், "மங்களவதிதான் பள்ளி செயலராக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் சி.இ.ஓ., லஞ்சம் கேட்டு, பள்ளி நிர்வாகம் தராததால் பழிவாங்குகிறார்.
 
பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்&' என, பெற்றோரிடம் பேசினர். கூட்டத்துக்கு வந்திருந்த அரசியல்வாதிகள், பெற்றோரை சாலை மறியலில் ஈடுபடும்படி தூண்டினர். அதன்படி, பெற்றோர், பிரப் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்யப் போவதை தெரிந்து கொண்டு, பிரச்னையை தூண்டிவிட்டவர்களும், அரசியல்வாதிகளும், "எஸ்கேப்&' ஆகினர். 35 ஆண்கள் உட்பட 113 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் வைத்திருந்தனர். மதியம் சாப்பாடு வழங்கிய போலீசார், மாலை 3 மணிக்கு மேல் அவர்களை விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us