UPDATED : அக் 19, 2020 12:00 AM
ADDED : அக் 19, 2020 12:06 PM
சென்னை:
&'அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயில, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் புரோஹித் ஒப்புதல் அளிக்க வேண்டும்&' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
மருத்துவ கல்லுாரியில் படிப்பதற்காக, அரசு பள்ளியில் பயின்று, &'நீட்&' தேர்வான மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதுவரை, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இச்சூழலில், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது; இது, வரவேற்கத்தக்கது.
இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தால், அதன் வாயிலாக, அரசு பள்ளிகளில் படித்த ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மாணவர்கள், மருத்துவ கல்வி பயில வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.
