தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடப்புத்தகங்களை தாண்டி படித்தால் நீட் தேர்வில் எளிதாக சாதிக்கலாம்

பாடப்புத்தகங்களை தாண்டி படித்தால் நீட் தேர்வில் எளிதாக சாதிக்கலாம்

பாடப்புத்தகங்களை தாண்டி படித்தால் நீட் தேர்வில் எளிதாக சாதிக்கலாம்


UPDATED : அக் 19, 2020 12:00 AM

ADDED : அக் 19, 2020 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2020 12:00 AM ADDED : அக் 19, 2020 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பாடபுத்தகங்களை தாண்டி படித்தால் நீட் தேர்வில் எளிதில் சாதிக்கலாம் என புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் சிபிஷா கூறினார்.
காரைக்கால், ஓ.என்.ஜி.சி., பப்ளிக் பள்ளி மாணவர் சிபிஷா, நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 105 இடத்தையும், புதுச்சேரி மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 500க்கு 491 மதிப்பெண் எடுத்து புதுச்சேரி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்திருந்தார். இவரது தந்தை மானக் ஷா,48; காரைக்கால் பாலிடெக்னிக் கல்லுாரியில் அசிஸ்டண்ட் புரோகராமராகவும், தாய் கலைச்செல்வி 48 பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மெட்டீரியல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஒரே மகனான இவர் பள்ளி மட்டுமின்றி திருச்சி ஆகாஷ் கோச்சிங் சென்டரிலும் வார விடுமுறையில் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துள்ளார்.

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறித்து சிபிஷா கூறியதாவது: 

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது என் ஆசை. அந்த கனவை நோக்கியே வகுப்பறையில் பயணித்தேன். பிளஸ் 2 மதிப்பெண் தாண்டி நீட் தேர்வில் வெற்றிப் பெற்றால் மட்டுமே இது சாத்தியம் என்பதால் கடினமாக உழைத்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது.
நீட் தேர்வில் என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், அந்த பாடப் புத்தகங்களை தாண்டி படித்தேன். பயிற்சியும் எடுத்தேன். அதுவே, நீட் தேர்வில் சாதிக்கவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவியது. எப்போது சந்தேகம் கேட்டாலும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் நிவர்த்தி செய்தனர். இது நீட் தேர்வினை எளிதாக எதிர் கொள்ள உதவியது. அவர்களுக்கு நன்றி.டில்லி எய்ம்ஸ் அல்லது ஜிப்மரில் டாக்டர் படிக்க ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us