உயர் கல்வி ஊக்க ஊதியம் ரத்து; அக்.28ல் ஆர்ப்பாட்டம்
உயர் கல்வி ஊக்க ஊதியம் ரத்து; அக்.28ல் ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 20, 2020 12:00 AM
ADDED : அக் 20, 2020 10:55 AM
தேனி:
&'&'உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்ததை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அக்.28ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,&'&' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆசிரியர்கள் பணியில்இருந்து கொண்டே பயில்வதை ஊக்குவிக்க உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. ஆசிரியர் பணிக்காலத்தில் அதிபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை 50 ஆண்டுகளாக பெற்றனர்.
அக்.,15ல் வெளியான அரசாணையில் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது நியாயமற்றது. இந்த உத்தரவு மற்றும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை ரத்து செய்ய வலியுறுத்தி அக்.,28 ல்மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்&'&' என குறிப்பிட்டுஉள்ளார்.
