தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரம்: கவர்னரிடம் வலியுறுத்தல்

மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரம்: கவர்னரிடம் வலியுறுத்தல்

மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரம்: கவர்னரிடம் வலியுறுத்தல்


UPDATED : அக் 21, 2020 12:00 AM

ADDED : அக் 21, 2020 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2020 12:00 AM ADDED : அக் 21, 2020 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, ஒப்புதல் வழங்கும்படி, சென்னையில், நேற்று கவர்னரை சந்தித்து, அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
&'நீட்&' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு உள்ளார்.
எடுத்துரைத்தோம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் கொடுத்த பின், மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவ கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், கவர்னர் எப்போது ஒப்புதல் வழங்குவார் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர், கவர்னர் மாளிகை சென்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர்.
அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்லுாரிகளில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, விரைவில் ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினர்.
சந்திப்பு முடிந்த பின், அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:

உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தால் தான், அரசு பள்ளி மாணவர்களை, அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்க்க முடியும்.
எனவே, சட்டத்திற்கு ஒப்புதல் கோரி, முதல்வர் உத்தரவின்படி கவர்னரை சந்தித்தோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடு வழங்கினால் தான், கிராமப்புற மாணவர்கள், மருத்துவராக முடியும் என்பதை எடுத்துரைத்தோம்.
சமூக நீதி

தமிழகம், சமூக நீதிக்கான மாநிலம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில், சமூக நீதி நிலைநாட்டப்பட்டது. சமூக நீதியை காக்க, கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக, உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரினோம். ஒப்புதல் கொடுத்தால், சிறப்பாக இருக்கும் என்பதை தெரிவித்தோம். அனைத்தையும் கேட்டு விட்டு, விரைவாக ஒப்புதல் வழங்க, நடவடிக்கை எடுப்பதாக, கவர்னர் தெரிவித்தார். 
அவரை கட்டாயப்படுத்த முடியாது. உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான், கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்பதை, தெளிவாக தெரிவித்துள்ளோம். நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் என, கவர்னர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டுமானால், உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தேவை என்பதையும், கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். கவர்னரை சந்தித்த பின், முதல்வர் வீட்டிற்கு சென்று, அவரிடம் சந்திப்பு விபரங்களை, அமைச்சர்கள் விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us