அரியர் தேர்வு மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க உத்தரவு
அரியர் தேர்வு மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க உத்தரவு
UPDATED : அக் 21, 2020 12:00 AM
ADDED : அக் 21, 2020 10:29 AM
மதுரை:
&'உரிய காலத்தில், &'அரியர்&' தேர்வு கட்டணம் செலுத்தத் தவறிய, பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்களுக்கு தேர்வெழுத அரசு மற்றொரு இறுதி வாய்ப்பளிக்கலாம்&' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் தேவதுரை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரி டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் மாணவர்.
உரிமை கோருவர்
இவர், அரியர் பாட தேர்வு கட்டணத்தை ஏற்று, தேர்வெழுத அனுமதிக்கக் கோரி தொழிற்கல்வி இயக்குனர், தொழிற்கல்வி தேர்வு வாரிய தலைவருக்கு மனு அனுப்பினார். பரிசீலிக்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் தேவதுரை மனு செய்தார். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
அரசுத் தரப்பில், &'மனுதாரர் ஒருவருக்காக விடைத் தாள் தயாரித்து, தேர்வு நடத்துவது சிரமம். மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், பலர் இது போல் உரிமை கோருவர்&' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, முடிவுக்காக மனுதாரர் காத்திருந்து உள்ளார். அதில் தேர்ச்சி அடையாததால், அரியர் கட்டணத்தை ஏற்று, தேர்வெழுத அனுமதிக்க, உடனடியாக விண்ணப்பித்துள்ளார்.
சிறந்தது
மனுதாரர், வேண்டுமென்றே உரிய காலத்தில் கட்டணம் செலுத்தத் தவறியதாக கூற முடியாது. மனுதாரருக்கு மட்டு மின்றி, அவரைப் போல், உரிய காலத்தில் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களுக்கும் தேர்வெழுத, அரசு மற்றொரு இறுதி வாய்ப்பளிக்கலாம்.
கொரோனா காலக் கட்டத்தில் தேர்ச்சி என அறிவிப்பதற்கு பதில், இறுதி வாய்ப்பாக தேர்வெழுத அனுமதிப்பது சிறந்தது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
