தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவனங்கள் மீது நுகர்வோர் சட்டப்படி வழக்கு தொடரலாமா?

கல்வி நிறுவனங்கள் மீது நுகர்வோர் சட்டப்படி வழக்கு தொடரலாமா?

கல்வி நிறுவனங்கள் மீது நுகர்வோர் சட்டப்படி வழக்கு தொடரலாமா?


UPDATED : அக் 22, 2020 12:00 AM

ADDED : அக் 22, 2020 10:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2020 12:00 AM ADDED : அக் 22, 2020 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலத்தின் உள்ள விநாயக பல்லையின் மருத்துவ படிப்பு சேவையை எதிர்த்து, மனு சோலங்கி உட்பட, மாணவர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது: 

நாங்கள், சேலம் விநாயக மிஷன் பல்கலையில், வெளிநாட்டு மருத்துவ படிப்பு திட்டத்தின் கீழ், 2005 - 06ம் கல்வி ஆண்டில் சேர்ந்தோம். இதன்படி, இரண்டு ஆண்டு தாய்லாந்திலும், இரண்டரை ஆண்டு, சேலம் விநாயக மிஷன் பல்கலையிலும் படிக்க வேண்டும்.
அதன்பின், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற, எம்.பி.பி.எஸ்., சான்றிதழை, பல்கலை வழங்க வேண்டும். இதன்படி, நாங்கள், இரண்டு ஆண்டுகள் தாய்லாந்தில் படித்தோம். ஆனால், அதன்பின், எங்களை தொடர்ந்து மேலும், தாய்லாந்திலேயே இரண்டு ஆண்டுபடிக்க வேண்டும் என, கூறிய பல்கலை, அங்கு வெளிநாட்டு மருத்தவ பட்டப்படிப்பு சான்றிதழ் பெறவும் கூறியது.
அத்துடன், வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்தவர்களுக்காக, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கூறியது. இதையேற்று நாங்களும் படித்தோம். ஆனால், எங்கள் பட்ட சான்றிதழை, தாய்லாந்து மருத்துவ கவுன்சிலும் அக்கீகரிக்கவில்லை; இந்திய மருத்துவ கவுன்சிலும் அங்கீகரிக்கவில்லை. இதனால் நாங்கள், இந்தியாவில் மருத்துவ தொழில் மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டோம்.
விநாயக பல்கலையின் சேவை குறைபாடு மீது, நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில், மனு தாக்கல் செய்தோம். ஆனால், கல்வி நிறுவனங்கள், பல்கலைகள் மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது என, கூறி, மனுவை ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது.
சேவை குறைபாடு தொடர்பாக, விநாயக மிஷன் பல்கலை மீது, நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைகள் மீது, நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியுமா என, ஆய்வு செய்வதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us