UPDATED : அக் 23, 2020 12:00 AM
ADDED : அக் 23, 2020 04:01 PM
அ நிறம் | அளவு
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) தெரிவித்துள்ளதாவது:
இப்பல்கலையில் எம்.எஸ்.சி., கடல்சார் உயிரியல், நுண்ணுயிர் மரபணு தொழில்நுட்பம், உயிர் மருத்துவ அறிவியல், புவித்தொலை உணர்வு மற்றும் நில தகவல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது. அசல் சான்றிதழ்களுடன் அக்.,31க்குள் மாணவர் சேரலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடக்கும் என தெரிவித்துள்ளார்.
